நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012 ம் ஆண்டு முதல் ஒரு முறை கூட முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை. ஆனால் அதுவே அவர்களின் வெற்றி முக்கிய தூண்டுகோலாக உள்ளது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு அவர்கள் தொடரின் மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் அதிக முறையாக 17 முறை மும்பை அணியும் விராட் கோலியின் பெங்களூரு அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்தமுறை படி பார்த்தால் மும்பை அணிக்கு சாதகமாக புள்ளி விவரங்கள் உள்ளன.

மும்பை – பெங்களூரு அணிகள் இதுவரை தங்களது ஹோம் மைதானங்கள் இன்றி பொது மைதானங்களில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களூரு அணி 4 வெற்றிகளும் மும்பை அணி 2 வெற்றிகளும் பெற்றுள்ளன. இந்த 6 போட்டிகள் நடைபெற்ற இடங்களில் சென்னை மைதானமும் ஒன்று. அந்த போட்டியிலும் பெங்களூரு அணியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் களமிறங்கவுள்ளது. மறு புறம் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை தொடக்கம் முதலே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கவுள்ளது.

Ref: https://tamil.mykhel.com